பக்கம்:காரும் தேரும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டின் பெருமை 93

எனப்படும் செஞ்சியும், அழகிய பலம் வாய்ந்த கோட்டை யைக் கொண்ட வேலூரும், தற்காலத் தமிழகத்தின் தலை நகரம் சென்னையும் தொண்டை நாட்டுப் பேரூர்களாகும்.

தொண்டை நாட்டுச் சிவனடியார்களாகத் திருத் தொண்டர் புராணம் பேசுவது எண்மரையாகும். அவர்கள் காளத்தி கண்ணப்பர்; காஞ்சிபுரம் திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன், கழற்சிங்க நாயனார், திருவேற்காடு மூர்க்க நாயனார், திருவொற்றி யூர் கலியநாயனார், மயிலாப்பூர் வாயிலார் நாயனார், திரு நின்றவூர் பூசலார் நாயனார் முதலியோராவர்,

சிவபிரான் நடம்புரிந்த திருத்தலம் திருவாலங்காடா கும். காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் பாடிய இடம் இதுவே. அவர் தலையால் நடந்த இடம் இஃது என்பதால் திருஞான சம்பந்தர் இப் பகுதியை மிதிக்கவும் அஞ்சி, தூரத்தில் நின்றே வணங்கிச் சென்றார். திருவாலாங்காட்டிற் கருகிலுள்ள பழையனுரளி லிருந்த வேளாளர் எழுபதின்மர் ஒரு வணிகனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, தங்கள் அனைவர் உயிரையும் கொடுத்தார்கள் என்ற வரலாறுண்டு. வையம் பெறினும் பொய்தானுரைக்க மாட்டார் எனச் சொன்ன நாட்டார் திகழ் தொண்டை மண்டலமே என்று தொண்டை மண்டல சதகம் கூறும். கொண்டலை நிகர்க் கும் வேளாண் குடியொடு தழுவிய நாடு தொண்டை நாடு. "ஆதவஞ் சூழ்தரு பல்கோடி தேசமனைத்தினுமா மாதவஞ் செய்ததன்றோ தமிழ்சேர் தொண்டை மண்டலமே' என்று மேலும் இந்நாடு புகழப்படுகிறது, நற்குண நற்செய்கைகளில் மேம்பட்டோரும், வீரஞ்சிறந்தோரும் வாழும் இடமும் இதுவே. -

வெண்பாவிற் புகழேந்தி, காரார் களந்தைப் புகழேந்தி, மாலார் களந்தைப் புகழேந்தி, ஐயன் களந்தைப் புகழேந்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/95&oldid=554085" இலிருந்து மீள்விக்கப்பட்டது