பக்கம்:காரும் தேரும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 * காரும் Ꮳ தரு ம்

எனப் புகழப்படும் நளவெண்பா தந்த புகழேந்திப் புலவர் பிறந்தபெருமைக்குரிய பொன்விளைந்த களத்துர் நேமிநாத ஆசிரியர் குணவீர பண்டிதருக்கும் பிறப்பிடமாகும், பக்திச் சுவை நன சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவரான தெய்வப்புலமைச் சேக்கிழார் பெருமான் பிறந்த பதியும் தொண்டை மண்டலப் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்துர ராகும். நூலிற் பரித்தவுரை யெல்லாம் பரிமேலழகன் தெரித்தவுரையாமோ தெளி' என்றபடி திருக்குறளுக்குச் சிறந்த உரை கண்ட பரிமேலழகர் பிறந்து வாழ்ந்த ஊர் கச்சியம்ப, யாகும். கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் பாடி அரங்கேற்றிய இடமாம் கந்தகோட்டமும் கச்சியம் பதியிலேயே உள்ளது. அம்மை மயிலாக விளங்கித் தவம் இயற்றியது மயிலாப்பூராகும்; இம் மயிலாப்பூரில்தான் திரு ஞான சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதம் நிகழ்ந்தது. திருவள்ளுவர் பெருமான் வாழ்ந்ததாகக் கூறப் படுவதும், திருவள்ளுவர் கோயில் இருப்பதும் இத்திரு மயிலாப்பூரே யாகும். சுந்தரர் மணந்ததும் பட்டினத்தார் சமாதியடைந்ததும் திருவொற்றியூராகும். தொண்டை மண்டல சதக ஆசிரியர், நன்னுரல் தந்த பவணந்தி முனிவரின் பிறப்பிடமான சனகாபுரத்தைத் தொண்டை நாட்டுப் பகுதியாகவே குறிப்பிட்டுள்ளார்.

தொண்டை மண்டல ச த க த் தி ன் ஆசிரியர் படிக்காசுப் புலவர் ஆவர். இவர் இயற்பெயர் அறியக் கூடவில்லை. 'பண்பாய உயர் சந்தம் படிக்காசலா தொருவர் பகரொணாதே' என்ற பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் சொற்கொண்டு இவர்தம் கவிதைப் புலமையினை அ றி ய ல ா ம் . இவர் பதினேழாம் நூற்றாண்டினர்; :וה: תש קשה சமயத்தினர். பூரீமத் உப சுப்பிரமணியரென்றும், .ே ச ைன த் தலைவரென்றும் சொல்லா நின்ற செங்குந்த மரபினர். தென்னாட்டுத் தவ யாத்திரையின்போது தில்லையைச் சேர்ந்த தில்லையம் மையை வழிபாடாற்றியபொழுது அம்மையின் அருளால் ஐந்து பொற்காசுகளைப் பஞ்சாக்கரப் படியில் பெற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/96&oldid=554086" இலிருந்து மீள்விக்கப்பட்டது