பக்கம்:காரும் தேரும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தமிழ்க் காப்பியங்கள்

தமிழ் இலக்கியம் மிகப் பழமையானது; வரலாற்றின் தொடக்கக் காலத்திலேயே தனக்கேயுரிய துய தனித் தன்மை வாய்ந்த இல்க்கியப் போக்கினை அமைத்துக் கொண்டது; தமிழ்த்தாய் என்று பிறந்தனள் என்று இயம்பமூடியாத அளவிற்கு, இயல்பினளாய் இருப்பவள். தமிழ்மொழி பழமையிலும், சொல்வளத்திலும், இலக்கண வரம்புடைமையிலும், செய்யுள் வகையிலும், பண்பாட்டுச் சிறப்பிலும் தலைசிறந்தது என அறிஞர் பலர் கூறிப் போந்தனர். உலகின் பிறநாடுகள் நாகரிகம் பெறாத நாளிலேயே தமிழ்மொழியில் கணக்கற்ற இலக்கிய இலக் கணச் செல்வங்கள் அழகுபெற்று மிளிர்ந்தன.

மொழியின் வாயிலாக வாழ்க்கையை வடித்துக் காட்டுவதே இலக்கியம் என்பர். மனிதனின் உள்ளுணர்ச்சி யினைத் தூண்டிவிட்டு, மனித வாழ்விற்கு அரணாக நின்று செம்மை இன்பம் பயப்பன இலக்கியங்களாகும். எள்ளி னின்று எண்ணெய் எடுபடுவது போல, இலக்கியத்திலிருந்து எடுபடும் இலக்கணம் என்பர் ஆன்றோர். அம்முறையிற் பார்ப்பின் இன்று நமக்குக் கிடைக்கும் மிகப் பழமையான ால் தொல்காப்பியமாகும். அஃது ஒர் இலக்கண நூல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தொல்காப்பியத் நிற்கு முன்னர்ப் பல இலக்கண நூல்களும் இருந்திருத்தல் வேண்டும் என்பது, தொல்காப்பியனார் தம் நூலின் பலவிடங்களில் என்ப. எம்மனார் புலவர் நூலறிபுலவர் நுண்ணிதின் உணர்ந்தோர்', 'யாப்பறி புலவர் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/99&oldid=554089" இலிருந்து மீள்விக்கப்பட்டது