பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. ஏ பாவம்!


பெண்களுடைய குணங்கள் நான்கு என்று ஒரு வழக்கு உண்டு. அவை அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை. இந்த நான்கிலும் முதலில் நிற்பது அச்சம். பெண்கள் மெல்லியலார் ஆதலின் அஞ்சுவது இயல்பு. அவர்களுக்குத் தைரியம் குறைவுதாள். சிறு கரப்பான் பூச்சியைக் கண்டாலும் பயந்து அடித்துக்கொண்டு ஓடுவார்கள் பாம்பென்றால் சொல்ல வேண்டுமா? ‘பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி, படையே நடுங்கும்போது பாவையர் நடு நடுங்கிக் கலங்குவது வியப்பே அன்று. பாம்பு தம்மிடம் வந்தால் மட்டும் நடுங்குவார்கள் என்பது இல்லை; வேறு ஒருவரை அணுகினாலும் நடுங்குவார்கள். கண்ணால் கண்டு விட்டாலே போதும்; நிலை குலைவார்கள்.

காரைக்கால் அம்மையார் பேயாக மாறினாலும் இயல்பான பெண் தன்மை மாறவில்லை. அவர் இப்போது தம் அச்சத்தை வெளிப்படுத்துகிறார். அந்த அச்சத்தில் பெண்ணின் இயல்போடு தாய்ப்பண்பும் கலந்திருக்கிறது. இறைவனுக்குத் தாயான பெருமாட்டி அல்லவா? ஆதலின் இறைவன் மேல் உள்ள பாம்பை எண்ணிப் பயப்படுகிறார்.

"யாராவது ஆண் பிள்ளைகள் இல்லையா? ஓடி வாருங்கள்; ஐயோ இந்தப் பாம்பை இங்கே புகவிடாமல் யாரும் தடுக்க மாட்டீர்களா?” என்று கூக்குரல் இடுவதுபோல முறையிடுகிறார்.

"இந்த அபாயத்தைத் தடுக்கும் யோக்கியதையை உடையவர்கள், தகவு உடையவர்கள், யாரும் இல்லையா?