பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


"தகவுடையவர்கள் இல்லையா? அம்மையின் மேல் பாம்பு ஊராமல் இருக்க வேண்டுமானால் இறைவன் மார்பிலேயே அது புகும்படி செய்யக்கூடாது. அவனுக்கும் அம்மைக்கும் நெடுந்தூரமா? அவன் மார்புக்கு ஆபரணம் என்று சொல்கிறார்களே! அங்கேதான் தார் இருக்கிறதே! அது போதுமே! இந்தப் பாம்பு எதற்கு? இதுவரைக்கும் இருப்பதுபோலவே அது இருக்கும் என்பது என்ன நிச்சசம்? என்றேனும் ஒருநாள் மலைமகளைச் சாரலாம். அதை நினைத்தாலே பயமாய் இருக்கிறது! அப்படி ஆகிவிட்டால் அதைப் போன்ற மகாபாவம் வேறு இல்லை.”

இப்படியெல்லாம் நினைக்கும்படியாக அம்மையார் பாடுகிறார்.

"தகவுடையார் தாம் ஊரேல்
தார்அகலம் சாரப்
புகவிடுதல் பொல்லாது
கண்டிர்! - மிகஅடா
ஊர்ந்திடுமா நாகம்
ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமேல் ஏபாவந்தான்!”

(அடா நாகம், ஊர்ந்திடும் நாகம் என்று கூட்ட வேண்டும். ஏ; இரக்கக் குறிப்பு)

இது காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியில் 13-ஆம் பாடல்.

இப்படித் தாயன்பும் பரிவும் தோன்றும்படி அம்மையார் பின்னும் சில பாடல்களைப் பாடியிருக்கிறார்.