பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அவ்வாறே சத்துவகுண மனப்பகுதி மற்றப் பகுதிகளையெல்லாம் அழித்துவிட்டுத் தானும் அழிந்துவிடும். மனத்தை அடக்கி ஒருமைப்பாட்டை உண்டாக்கிக் கொண்டால் மனோவயம் உண்டாகும். பிறகு மனோநாசம் உண்டாகும். அதுவே ஜீவன் முக்த நிலை.

சத்துவகுணம் விஞ்சி நிற்கும்போது மனம் இறைவன் திருவருளை நாடும். அவன் திருவுருவத்தைத் தியானிக்கும். தன் விருப்பப்படி திரிந்த மாட்டை ஒரு முளையடித்துக் கட்டி விட்டால் அது அந்த முளையையே சுற்றிச் சுற்றி வரும். ஒவ்வொரு சுற்றுக்கும் கயிற்றின் நீளம் குறைந்து கொண்டே வரும். கடைசியில் கயிறு, முளை, கழுத்து எல்லாம் இணைந்துவிடும்.

இறைவன் என்ற முளையை அடித்து அதைச் சுற்றி மனம் வளைய வருமானால் எப்போதும் இறைவன் நினைவு என்ற வட்டத்துக்குள் சுற்றும். பிறகு மெல்ல மெல்ல இயக்கமே ஒழிந்து இறைவனோடு ஒன்றிவிடும்.

காரைக்கால் அம்மையார் தம் மனத்தை அடக்கிப் பழகினவர். இறைவனுடைய திருவுருவத்தைத் தியானித்து நலம் பெற்றவர். உலகியலில் உண்டாகும் அல்லல்கள், அவலங்கள் தம்மைத் தாக்காமல் பாதுகாப்புச் செய்து கொண்டவர். க்ஷேமமாக வாழ்வும் வாழ்வையே விரும்புகிறோேம். உடம்பு நோய் நொடியின்றி சுகமாக இருந்தால் அதையே க்ஷேமமாகக் கருதுகிறோம். ஆனால் இந்த உடம்பைக் காட்டிலும் சிறந்தது உயிர். அதற்கு க்ஷேமமம் உண்டாக வேண்டும். பிறப்பு அதற்கு வேண்டும். அதுதான் மகா க்ஷேமம், அதைப் பெருஞ்சேமம் என்கிறார் காரைக்கால் அம்மையார்.

தம்முடைய மனமே தமக்கு உறுதுணையாக இருந்துதான் உய்வதற்காக இந்தப் பெருஞ் சேமத்தைச் செய்தது என்று சொல்ல வருகிறார். தன்னுடைய அருமை மகள் தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு யாருடைய உதவியும்