பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


இல்லாமல் சாமர்த்தியமாகக் குடித்தனம் செய்கிறதைப் பார்த்த தாய், "என் குழந்தை தனியாகவே இருந்து தானே எல்லாவற்றையும் செய்து கொண்டு கெட்டிக்காரியாக வாழ்கிறாள்” என்று பெருமைப்பட்டுக் கொள்வதைப் போலப் பேசுகிறார் அம்மையார்.

“என்னுடைய நெஞ்சம் யாருடைய உதவியையும் பெறவில்லை. பாவம் தனியாகவே இருக்கிறது. ஒன்றிக்கட்டை அது எத்தகைய வியப்பான செயலைச் செய்திருக்கிறது தெரியுமா” என்று தொடங்குகிறர்.

“தானே தனிநெஞ்சம்.”

'தன்னை உய்யும்படி செய்வதற்கு வேறு யாரையும் நாடவில்லை. தன்னைத் தானே உயர்த்திக் கொண்டது தான் உய்வதற்கு இதுதான் வழி என்பதை அறிந்து கொண்டு தனக்குத் தானே பெருஞ் சேமத்தைச் செய்து கொண்டது” என்கிகிறார்.

"தன்னை உயக் கொள்வான்
தானே பெருஞ்சேமம் செய்யுமால்.”

கெட்டிக்காரப் பையன் வருங்காலத்தில் நன்றாக வாழ வேண்டுமென்று விரும்புகிறான். அவனைக் கைதூக்கிவிட யாரும் இல்லை. இருந்தாலும் அவன் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னுக்கு வர எண்ணுகிறான், எவ்வளவோ பேரை நாம், "தாமே உயர்த்திக் கொண்ட மனிதர் (Selfmade man) என்று சொல்வதில்லையா? அத்தகையவர்களுள் ஒருவன் அவன்.”

மற்றவர்களைப் போலப் பொழுதை விணாக்காமல் உழைத்து ஊதியம் பெற்றுக்கொண்டு கண்ட செலவு செய்யாமல், பெற்றதைச் சேமிக்கிறான். அவனுடைய உழைப்பினால் பணம் சேர்கிறது. பெரிய சேமிப்பை அவன் செய்து விடுகிறான். அவனே சேர்த்த சேமிப்பு இது.