பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


காரைக்கால் அம்மையார் மனம் அவ்வண்ணமே, தானே பெருஞ்சேமம் செய்த பெருமையை உடையது.

எப்படி அந்தப் பெருஞ் சேமத்தைச் செய்தது? எந்தப் பொருளை ஈட்டிச் சேமித்து வைத்தது? இன்று வந்து நாளை போகும் பொருளை அது சேமிக்கவில்லை. பரம்பொருளையே சேமித்து வைத்திருக்கிறதாம். அதைச் சொல்கிறார்.

அந்தப் பொருள் எப்படி இருக்கிறது? சிவபெருமான் தானே அப்பொருள்? அவன் திருக்கோலம் எவ்வாறு இருக்கிறது?

அவனுடைய திருமார்பில் நாகப்பாம்பு இருக்கிறது. அதை இறைவன் அணிகலமாகப் பூட்டிருக்கிறான். திருமண முழுவதுமே பாம்பை ஆபரணமாகப் போட்டிருக்கிறான். நீண்ட பாம்பு அது. அது நஞ்சை உமிழும் நாகம். அந்த நஞ்சு நெருப்பைப் போன்ற வெம்மையை உமிழ்கின்றது. அது நஞ்சு கக்கினால் கண்டவர்கள் கண் எரியும்; பட்டவர்கள் உடம்பு எரியும். பொங்குகின்ற அழலின் வெம்மையையுடைய நஞ்சை உமிழும் நீண்ட நாகம் அது.

“பொங்கு அழல்சேர் நஞ்சு:உமிழும்
நீள்நாகம்.”

நாகத்தை இறைவன் அணிகலனாகப் பூண்டிருக்கிறான். பூண்களால் உடம்புக்கு அழகும் பொலிவும் மிகுதியாகும். ஆனால் இறைவனுக்கு அப்படி இல்லை. பூண்களால் அவனுடைய ஆகம் பொலிவு பெறவில்லை. அவனுடைய ஆகத்தால்அந்தப் பாம்பு பொலிவைப் பெறுகிறது.

எப்படிப் பொலிவைப் பெறுகிறது? நஞ்சு உமிழும் நாகத்தைக் கண்டு யாவரும் அஞ்சுவார்கள்; அடித்துக் கொல்லப் பார்ப்பார்கள். கருடனைக் கண்டால் நாகம் அஞ்சும். ஆனால் இறைவன் திருமேனியிலுள்ள நாகத்தைக்