பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

கண்டு பக்தர்கள் அஞ்சுவதில்லை. அந்த நாகம் பக்தர்களை ஒன்றும் செய்யாது. ஆகவே அதைச் சங்கராபரணமாகப் பார்த்து வணங்குகிறார்கள் அன்பர்கள். கருடனைக்கண்டால் அதற்கு அச்சம் இல்லை. இவை அந்தப் பாம்புக்குரிய பெருமை, பொலிவு அல்லவா? அத்தகைய பாம்பை உடையவன் எம்பெருமான்.

பூண்ஆக த்தால்பொலிந்து
பொங்குஅழல்சேர் நஞ்சு உமிழும்
நீள்றாகத் தான்.

இந்தத் திருக்கோலம் உள்ள சிவபெருமானை நெஞ்சம் நினைத்து நினைத்து உள்ளுக்குள்ளே வைத்துப் பெருஞ்சேமமாகச் சேகரித்துக் கொண்டது. தன்னை விட்டு நழுவ விடாமல் தியானித்துத் தியானித்து உள்ளே வைத்துப் பூட்டிக் கொண்டு விட்டது. இனிக் கவலை இல்லை.

பெரிய தொகை ஒன்றை ஈட்டிப் பெட்டிக்குள்ளே வைத்துப் பூட்டிக் கொண்டவர்களுக்கு வருங்காலத்தில் துன்பம் இராது. அந்தச் சேமப் பொருளால் அவர்கள் நன்றாக வாழலாம்; உய்தி பெறலாம்.

இந்த நெஞ்சம் பெரிய பொருளாகிய நீண்ட நாகத்தானை நினைந்துப் பெருஞ்சேமம் செய்து கொண்டது; பெரிய சேமிப்பைச் சேர்த்து உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது.

பெரும் சேமம் செய்யுமால்
.................................................
நீள்நாகத் தானை நினைந்து.

இவ்வாறு பெரிய சேமிப்பைச் சேர்த்துக்கொண்ட பிறகு அது உய்வதற்கு என்ன தடை? மனம் வேறு, தாம் வேறு என்று இல்லாத ஒற்றுமை இருப்பதால் தம் அநுபவத்தையே மனத்தின் செயலாக வைத்துக் கூறுகிறார்.

நா.—7