பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தானே தனிநெஞ்சம் தன்னை
உயக்கொள்வான்
தானேபெருஞ்சேமம் செய்யுமால்
—தானே ஓர்
பூண்ஆகத் தால்பொலிற்று
பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீள்நாகத் தானைநினைந்து

[என்னுடைய நெஞ்சம் தானே தனியாக வேறு துணையின்றி இருக்கும் நெஞ்சம். இது தன்னைத்தானே உய்யக்கொள்ளும் பொருட்டு, ஒப்பற்ற, தன்னைப் பூணும் திருமேனியால் பொலிவு பெற்றுக் கொழுந்து பொங்கும் அழலின் வெம்மையைச் சேர்ந்த நஞ்சை உமிழும் நீண்ட நாகத்தை உடையவனைத் தியானம் செய்து, அவனைத் தனக்குள்ளே பெரிய சேமிப்பாகச் சேர்த்துக் கொள்ளும்.

தனி - துணையில்லாத உயக் கொள்வான் - நல்வாழ்வு பெரும்பொருட்டு; உஜ்ஜீவனம் அடையும் பொருட்டு பெரும் சேமம் - பெரிய சேமிப்பு. பூண் ஆகத்தால் - பூணுகின்ற திருமேனியினால், அழல் - ஆகுபெயர்; வெம்மைக்கு ஆயிற்று தானே நினைந்து தானே பெருஞ்சேமம் செய்யும் என்று கூட்டுக. ஆல்; அசை]

இது அற்புதத் திருவந்தாதியில் 14-ம் பாடல்.