பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”

என்று திருவள்ளுவர் சொல்கிறார். உலகில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்திறார்கள். அவ்வாறு உதவி செய்தவர்களை அந்த உதவியைப் பெற்றவர்கள் நன்றியறிவுடன் நினைக்கவேண்டும். அதுதான் மனிதப் பண்பு.

மக்கள் பிறருக்கு எவ்வளவு சிறந்த உபகாரங்களைச் செய்தாலும் இறைவன் செய்த உபகாரத்துக்கு அவை சிறிதேனும் ஈடாவதில்லை. இந்த அற்புதமான உடம்பை அளித்திருக்கிறான். இது எவ்வளவு பெரிய உபகாரம்! இந்த உடம்பில் ஏதேனும் ஓர் உறுப்புப் போய்விட்டால் மனிதன் போலி உறுப்பைப் பொருத்திக் கொள்கிறான். ஆனாலும் இயல்பான உறுப்பைப் போல அது ஆகுமா? பதிலாக வேறு ஒன்றைப் பொருத்திக் கொள்ள முடியாத அங்கவீனம் பலருக்கு உண்டாகிறதே! அவர்களைப் பார்த்தால் நல்ல உறுப்புக்களை உடையவர்கள், ‘இறைவன் நமக்கு உறுப்பிலே குறை வைக்காமல் நன்மை செய்திருக்கிறானே!’ என்று எண்ணி உருக வேண்டாமா? ஊமை ஏதோ உளறுவதைக் கேட்டால் நாம் சிரிக்கிறோம். நம்மையும் ஊமை ஆக்காமல் பேச வாய் தந்திருக்கிறானே, இறைவன்; அதை நினைப்பூட்டிக் கொள்ள அந்த ஊமை உதவுகிறானே! அவனைப் பார்த்துச் சிரிக்காமல், ஆண்டவன் நமக்குச் செய்திருக்கும் நலங்களை எண்ணி அப்பெருமானைப் பாராட்டுவதல்லவா அறிவு படைத்த மனிதனுடைய கடமை?

கருவி கரணங்களைத் தந்து, ஒடியாடப் பூமியை வைத்து, மழையைத் தந்து, சூரியசந்திரர்களைத் தந்து, மனைவி மக்களைத் தந்து, நண்பர்களைத் தந்து வாழ வைத்திருக்கிறானே, அதை நினைத்துப் பார்த்தால் உள்ளம் உருகாதா? அண்டத்தில் உள்ள அதிசயங்களையும் உடம்பாகிய பிண்டத்தில் உள்ள அதிசயங்களையும் எண்ணிப் பார்த்தால் இறைவனுடைய