பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


தம் நலத்தை நினைக்கிறார்கள். இறைவனை வழிபட்டால்தான் தம் பதவியை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதை எண்ணுகிறார்கள். சரி; இது செய்யத்தான் வேண்டும்" என்று ஆண்டவனை அணுகுகிறார்கள்.

இறைவனுக்குப் பூசை செய்ய எண்ணிவிட்டார்கள். பணக்காரர்கள் செய்கிற பூசை எப்படி இருக்கும்? மற்றவர்களுக்குக் கிடைக்காத மலர்களையும் பிற பொருள்களையும் சேமிக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் காமதேனுவின் பாலாலே அபிஷேகம் செய்யலாம். கற்பக மலராலே அருச்சிக்கலாம். அமுதத்தையே நிவேதனம் செய்யலாம்.

‘பூசை செய்யலாமா, வேண்டாமா?’ என்று நினைத்திருந்து, பிறகு, செய்யலாம் என்று தீர்மானித்த பிறகு பூசைக்குரிய திரவியங்களைச் சேகரிக்க முற்படுகிறார்கள்; பெரிய பெரிய மலர்களைப் பறித்து வருகிறார்கள். நீளமான மாலைகளைக் கொணர்கிறார்கள்.

ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து தாம் கொண்டு வந்த மலரால் திருவடிக்கு அருச்சனை செய்கிறார்கள். பிறகு நீண்ட மலர் மாலைகளால் புனைகிறார்கள். அந்த மாலைகளைப் பார்க்கும் போது, நமக்கு, "அடே அப்பா! எவ்வளவு பெரிய மாலை' என்ற வியப்புத் தோன்றுகிறது.

'வானவர்கள் பெரியவர்கள்; பணத்தால் பெரியவர்கள்; பதவியினால் உயர்ந்தவர்கள். தம்முடைய நிலைக்கு ஏற்றபடிதான் பெரிய மாலைகளைப் புனைந்திருக்கிறார்கள்.” என்று நாம் வியக்கிறோம். ஆனால் காரைக்கால் அம்மையார் என்ன சொல்கிறார்? நாம் புறக் காட்சியையே கண்டு மயங்குகிறவர்கள். அம்மையாரோ உள்ளத்தினுள்ளே புகுந்து சோதனை போடுகிறவர். "எல்லாம் வெளி வேஷம்!உள்ளே ஒன்றும் இல்லை. அந்த மாலைகளால் ஆண்டவன் அடியை அலங்காரமா செய்