பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


கிறார்கள்? அந்த அடிகள் கண்ணுக்குத் தெரியாமலே மறைத்து விட்டார்கள். கருத்திலும் அந்த அடிகளை அவர்கள் வைக்கவில்லை. மாலை பொருந்தியதே ஒழிய மனம் பொருந்தவில்லை. அவ்வாறு பொருந்துவதற்குரிய சக்தி அவர்களிடம் இல்லை. அதற்கு எவ்வளவோ காலம் பழக வேண்டும். அடியோடு ஒட்டி உறவாட வேண்டும். அவர்கள் அந்தத் திறமை இல்லாதவர்கள்; மாட்டாதவர்கள் என்கிறார்.

நினைந்திருந்து வானவர்கள்
நீள் மலரால் பாதம்
புனைந்தும் அடிபொருத்த
மாட்டார்.

ஃ      ஃ        ஃ

பிறகு அம்மையார் தம்மையே சோதனை போட்டுக்கொள்கிறார். அவர்கள் அடியை மலராற் புனைந்தும் அடியோடு பொருந்துவதில்லை. நானோ—?”

அவரும் நினைந்திருக்கிறார். அவர்களைப் போல அல்ல. தம் பதவியையும் தமக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளையும் இறைவனிடம் அவற்றைப் பெறலாம் என்பதையும் தேவர்கள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது ஒன்றல்ல; பல. அவற்றை நினைந்து நினைந்து தியங்கியிருந்து பிறகே பூசை செய்யப் புகுந்தார்கள். அம்மையார் அப்படியா நினைந்திருந்தார்? அவர் தாம் நினைந்தபடியே முன்பே சொல்லியிருக்கிறார்.

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே
துணிந்தொழிந்தேன்,
ஒன்றேஎன் உள்ளத்தின்
உள்ளடைத்தேன்