பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

அங்கே சென்று தாம் வந்த செய்தியை ஆள் மூலம் பரமதத்தனுக்குச் சொல்லியனுப்பினர். அவன் அஞ்சித் தம் இரண்டாம் மனைவியோடும் குழந்தையோடும் சென்று எதிர் கொள்ள எண்ணிப் புறப்பட்டான். புனிதவதியார் இருந்த இடம் போய்த் தன் இரண்டாம் மனைவியையும் குழந்தையையும் வணங்கச் செய்து, தானும் அவருடைய அடியில் வீழ்ந்தான். பணிந்து எழுந்து, “யான் உம்முடைய அருளால் இங்கே இனிமையாக வாழ்க்கை நடத்துகிறேன். இந்தக் குழந்தைக்கு உம்முடைய திருநாமத்தையே வைத்திருக்கிறேன்” என்று பணிவுடன் கூறி மீட்டும் வணங்கினன்.

அப்போது புனிதவதியார் அஞ்சி ஒருபுறமாக ஒதுங்கி நிற்கச் சுற்றத்தினர் “உன் மனைவியை நீ வணங்குகிறாயே! இது முறையாகுமா?” என்று கேட்டனர்.

அப்போது அவன், “இவரை மற்றப் பெண்களைப் போல மானிடப் பெண் என்று நினைக்காதீர்கள். இவர் தெய்வப் பிறவி. இதனை உணர்ந்த பிறகே இவரை மனைவியாகக் கொண்டு வாழ்தல் அபசாரம் என்று இவரை விட்டுப் போனேன். இவரிடம் உள்ள பக்தியினால் இதோ இந்தக் குழந்தைக்கு இவருடைய பேரையே வைத்தேன். இவர் தெய்வத்தன்மை உடையவர் என்பதை அறிந்தவனாதலால் வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்” என்று சொன்னன். அதைக் கேட்ட உறவினர் ஒன்றும் அறியாமல் மயங்கி நின்றனர்.

புனிதவதியார் பரமதத்தனுடைய கருத்தை உணர்ந்து கொண்டார். “இவர் எண்ணிய எண்ணம் இதுவானால் இந்த உடம்பைத் தாங்குவதனால் என்ன பயன்? இவருக்காக அமைந்த இந்த உடம்பு இனி எனக்கு வேண்டாம். சிவபெருமானே, இனி நின் தாள்களைப் போற்றும் பணியையன்றிப் பிறிதொரு பணி எனக்கு இல்லை. ஆதலின் அடியாளுக்குப் பேய்வடிவை அருள் செய்யவேண்டும்” என்று இறைவனைத் துதித்து நின்றார். அவர் வேண்டுகோளின்படி கண்டார்