பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


என்று சொல்லியிருக்கிறாரே, ஆகவே பலவற்றையும் நினைந்திருந்த தேவர் நிலை வேறு; ஆண்டவனையே நினைத்திருந்த அம்மையார் நிலை வேறு.

இறைவனை நினைந்து நினைந்து வாயார அவன் திருநாமங் களையும் இயல்புகளையும் கூறிக் கூறிப் புகழ்பவர் அம்மையார். ஆண்டவனுடைய திருவுருவத்தை மனத்தில் வைத்துத் தியானித்து அவன் அங்கங்களின் எழிலை வாயாரச் சொல்லிப் பாடுகிறவர்.

‘மின்னலைப் போன்ற சடையையுடையவனே, பெரிய சடையையுடையவனே! என்று ஏத்துகிறவர்; வேதம் ஒதும் எம்பெருமானே, வேதியனே என்று துதிக்கிறவர். அப்படிப் பாடும்போதெல்லாம் அவன் திருவுருவத்திலும் திருவடியிலும் நெஞ்சு பதிந்து நிற்கிறவர். தேவர்கள் மலரை இட்டுப் பூசை செய்தும் மலர் இடும் திருவடியில் மனத்தைப் பொருத்துவதில்லை. அம்மையார் பூசை செய்யவில்லை. மனத்தால் தியானிக்கிறார்; வாயினால் ஆண்டவனைத் துதிக்கிறார். அவர் உள்ளம் இறைவன் திருவடியிலே பொருந்தியிருக்கிறது.

'சிவபெருமான் தேவர்கள் இடும் மாலைகளையும் புனைந்து கொள்கிறான்; அம்மையாருடைய அன்பையும் ஏற்றுக்கொள்கிறான். வெளிப் பார்வையில் தேவர்கள் நினைப்பதும் இருப்பதும் பிறகு மலரால் பாதத்தைப் புனைவதும் சிறப்பாகத் தோற்றுகின்றன. ஆனால் அவர் உள்ளம் இறைவன் அடியில் பொருந்தவில்லை. அம்மையாரோ நினைந்திருந்து இறைவனை வாழ்த்துகிறார்.

இறைவன் இருவருடைய இயல்பையும் உணர்ந்தவன். தேவர்கள் ஒரு பயனை எதிர்நோக்கி மனம் பொருந்தாமல் வழிபடுகிறார்கள். அம்மையாரோ மனம் பொருந்தித் தியானித்து வாழ்த்துகிறார். அப்படியானால் அம்மையாருக்கு என்ன செய்வான் இறைவன்? நிச்சயமாக அருள் புரிவான்;பிறப்பின்றிச் செய்து,