பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


விடுவான். அம்மையார் இப்படிச் சொல்லவில்லை. "இனி என்ன செய்வேனோ?"என்று ஐயப்படுபவர் போல முடிகனரிறார். இதில் நமக்கு ஒர் ஐயமும் இல்லை. உறுதியாக இறைவன் அருளைப் பெற்றவர் அவர். இனியும் பேரருளைப் பெறப் போகிறவர்.

பின், ஏன் அவர் ஐயப்பட வேண்டும்? அதுதான் அன்பின் இயல்பு. அவன் திருவுள்ளம் எதுவோ?’ என்று ஏங்குவதே அன்பின் இலக்கணம்.

அம்மையார் கூறுவதைக் கேட்கலாம்.

நினைந்திருந்து வானவர்கள்
நீள்மலரால் பாதம்
புனைந்தும் அடிபொருந்த
மாட்டார்—நினைந்திருந்து
மின்செய்வார் செஞ்சடையாய்,
வேதியனே, என்கின்றேற்கு
என்செய்வான் கொல்லோ இனி?”

[தேவர்கள் தம் நலத்தையும் இறைவனை வழிபட்டால் அவை மிகும் என்பதையும் நினைந்து, சில காலம் தாழ்த்திருந்து, பிறகு நீண்ட மாலைகளால் இறைவனுடைய பாதத்தை அலங்காரம் செய்தும் அந்தத் திருவடியில் மனம் பொருந்த மாட்டார்; எப்போதும் இடைவிடாது அவனையே நினைத்திருந்து, மின்னலைப் போன்ற பெரிய செம்மையையுடைய சடையையுடையவனே, மறையை எப்போதும் ஓதிக்கொண்டிருப்பவனே என்று வாழ்த்துகிற எனக்கு அவன் இனிமேல் என்ன செய்தருளுவானோ?]

வானவர்கள் நினைந்து, பிறகு சிறிது யோசனை பண்ணிப் பொறுத்திருந்து பிறகே அடி புனைவர். நினைந்து இருந்து என்று பிரித்து, இருந்து என்பதற்குக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்திருந்து என்று பொருள் கொள்ளவேண்டும்.