பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



112


கல் சிறியதானாலும் நீரில் போட்டால் அமிழ்ந்துவிடும். ஆனால் மிகப் பெரிய கல்லானாலும் நீரின் மேல் மிதக்கும். பெரிய கட்டையின் மேல் வைத்தால், அந்தக் கட்டையின் சார்பால் அது கீழே ஆழாது. அதற்கு ஆதாரமாக உள்ள கட்டை ஆழாமல் காத்து நிற்கும்.

இறைவன் பிறவிக் கடலில் அமிழாதவன். பிறவா யாக்கைப் பெரியோன்” என்று சிலப்பதிகாரம் கூறும். ஆதலால் அவன் திருத்தாள் நமக்குப் புணையாக உதவும். இயல்பாகப் பிறவிக் கடலில் ஆழ்வது ஆன்மா. இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொண்டால் ஆழாது.

இறைவனுடைய திருவடியை மனத்தால் நினைப்பதும், வாயினால் புகழ்வதும், உடம்பால் வணங்குவதும் அவ்வடியோடு சேர்வதாகும். இடை விடாது நினைப்பவர் திருவடியைச் சேர்ந்தவர்; அவரையே அடியார் என்பர். காரைக்கால் அம்மையார் அப்படி இறைவன் தாளைச் சேர்ந்தவர் அதனால் அவருக்குத் துன்பமே இல்லாமல் போயிற்று. “தாம்ஆர்க்கும் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழை ஓர் காதில்கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க் கொய்ய மலர்ச்சேவடியிணையே குறுகின' அப்பர் சுவாமிகள் அந்தச் செயலால்

"...........நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும்; துனபம் இல்லை”

என்று வீறு பேசுகிறார். கடலை நீந்தின பிறகு கடலில் உள்ள அலைக்கும் திமிங்கிலத்துக்கும் அஞ்ச வேண்டிய நிலை இல்லை அல்லவா?

பெரிய கடலில் அகப்பட்டு அலைகளால் மோதுண்டு அல்லற்பட்டுத் தடுமாறிய ஒருவர் தமக்குக் கிடைத்த ஒரு