பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


பிறந்தவர்கள் கன்மங்களைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். பிறவி மேலும் மேலும் புண்ணிய பாவங்களைப் பெறச் செய்து அவற்றுக்கு உரத்தை ஊட்டுகிறது. அலைமேல் அலை வந்து மோதுவது போலப் பிறவியின் மேல் பிறவி வந்து கொண்டே இருக்கிறது. பிராரப்த வினையைக் கழிப்பதற்குப் பிறவி வருகிறது. அப்படிப் பிறந்து வினைப்பயனை நுகர்ந்து கொண்டிருக்கும்போதே புதிய வினைகளைச் செய்கிறாேம். அவை ஆகாம்யம் எனப்படும். அவை வரும் பிறவிகளுக்கு வித்தாக இருக்கின்றன. ஆகவே முன்னை வினை பிறவிக்கு ஏது ஆகிறது; பிறவியோ மறுபடியும் வினைக்கு ஏதுவாக நிற்கிறது. இந்தச் சுழற்சியில் அகப்பட்டவர்களுக்கு மீட்சியே இல்லை. இறைவன் திருத்தாளாகிய புணை இல்லாவிட்டால், மீளாப் பிறவியில் அலைக்கழிய வேண்டியதுதான்.

வினைக்குஅடலை ஆக்குவிக்கும் மீளாப்பி றவி

என்று காரைக்கால் அம்மையார் சொல்கிறார்.

இறைவன் தாளைப் பற்றிக் கொண்டமையால் இந்த வாழ்வே இன்ப வாழ்வாகிவிடுகிறது. இனிமேல் வரும் வாழ்வோ என்றும் மங்காத பேரின்ப வாழ்வு. பிறப்பென்னும் கடலில் விழவேண்டிய நிலை இனி இல்லை.

இப்போது எந்தவிதமான இடரும் இல்லை என்றவர், இனிமேல் துன்பத்துக்கு இடமாகிய பிறவியே இல்லை, அந்தப் பெருங்கடலை நீந்தி விட்டோம்' என்கிறார். இப்போதே இந்த உறுதி வந்துவிட்டது. சீவன் முக்தி நிலை என்று அதைச் சொல்வார்கள்.

வறுத்த நெல்லுக்கும் மற்ற நெல்லுக்கும் வேறுபாடு உண்டு. வறுத்த நெல் முளைக்காது. சீவன் முக்தர்கள் வறுத்த நெல்லுக்கு ஒப்பானவர்கள், வறுத்த நெல்லை நிலத்தில் போட்டுப் பார்த்துத்தான், முளைக்குமா, முளைக்காதா என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்பது இல்லை. வறுத்த நெல்