பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


என்றாலே முளைக்காத நெல் என்று உறுதியாகச் சொல்லலாம். அவ்வாறே இந்தத் தேகம் உள்ள போதே இறைவன் திருத்தாளில் ஒன்றிய சீவன் முக்தர்களுக்கு இனிப் பிறப்பில்லைை என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆதலினால்தான் அம்மையார், இனிப் பிறவிக்கடல் இல்லை; அதை நீந்திவிட்டோம் என்று சொல்கிறார்.

.

—இனிஓர்
வினைக்குஅடலை ஆக்குவிக்கும்
                                 மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

இறைவன் திருத்தாளை நினைந்து அதனோடு இணைந்தவர் களுக்கு இந்த வாழ்விலேயே இடரில்லா இன்பநிலை உண்டாகும்; இனிமேல் பிறவாத பேரின்பப் பெருவாழ்வு கிடைக்கும். இப்படி ஒரு சிறந்த நிலை வந்துவிட்டால், "ஓ! நாம் உய்ந்து விட்டோம்” என்று பெருமிதம் அடைவது நியாயந்தானே?


இனியோநாம் உய்ந்தோம்:
இறைவன்தாள் சேர்ந்தோம்;
இனிஓர் இடர்இலோம், நெஞ்சே!—
இனிஓர்
வினைக்குஅடலை ஆக்குவிக்கும் மீளாக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

[என் நெஞ்சே, இப்போது நாம் உய்ந்து போறோேம்; இறைவன் திருத்தாளைச் சேர்ந்துவிட்டோம்; ஆகையால் இனி ஒரு துன்பமும் நாம் இல்லோம்; இதை இப்போது சிந்தித்துப் பார்; கன்மங்களுக்கு உரிய வலிமையை உண்டாக்குவதும், தன்பால் விழுந்தவர் மீளாமல் இருக்கப் பண்ணுவதும் ஆகிய பிறவியாகிய ஒலித்தலையுடைய கடலை நாம் நீந்திவிட்டோம்.