பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. காண்பவர் முவர்



ஏதேனும் ஒருபொருளைப் பலபேர் காண்கிறார்கள். அவர் காணும் பொருள் ஒன்றே ஆயினும், அவரவர்களுடைய பார்வையில் வெவ்வேறான விளைவு உண்டாகும். பச்சைப் பசேலென்று இலை அடர்ந்த கொடிக்கு நடுவே வெள்ளை வெளேரென்ற மல்லிகைப் பூக்கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்குகிறது. அதை ஓர் ஓவியன் பார்க்கிறான். அதன் அழகைக் கண்டு சுவைக்கிறான். தன்னுடைய தூரிகையினால் அதைப் போலவே வண்ணப்படம் ஒன்றைத் தீட்ட எண்ணுகிறான். அவனுடைய பார்வை ஒவியக்காரன் பார்வை.

வேறு ஒருவன் அந்தக் கொடியைப் பார்க்கிறான். அவன் தோட்டக்காரன். வளமாக வளர்ந்துள்ள கொடியைக் கண்டு மண்வாசனையும் அதை வளர்ப்பவருடைய முயற்சியையும் பாராட்டுகிறான். அவனுடைய பார்வை தோட்டக்காரன் பார்வை.

புதிதாக மணம் செய்து கொண்ட இளைஞன் அந்தக் கொடியைப் பார்க்கிறான். பூத்திருக்கும் பூங்கொத்தைப் பார்க்கிறான். உடனே அவனுடைய காதலியின் கருங்கூந்தல் நினைவுக்கு வருகிறது. இந்தப் பூங்கொத்து அவள் தலையில் இருந்தால்—? அதைப் பறித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் முந்துகிறது. அவன் பார்வை காதலன் பார்வை.

ஒரு பக்தன் மல்லிகைக் கொடியைப் பார்க்கிறான். இறைவனுடைய திருவடியில் மலரைப் பறித்து அருச்சனை செய்ய வேண்டுமென்ற எண்ண்ம் தோன்றுகிறது. வேறொருவன்