பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


காதலால் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே.

கண்ணினால் மட்டும் காண்பவர்களுக்கு அழகு வடிவமாகத் தோன்றுகிறான் இறைவன். கண்ணோடும் கருத்தோடும் இறைவனாகக் காண்பவர்களுக்கு ஒட்டுறவை உணர்த்திக் கை தொழும்படி செய்து காட்சி அளிக்கிறான். காதலால் கண்ணாலும் கருத்தாலும் கண்டு பிறகு கண்ணை முடி உண்முகமாகப் பார்க்கிறவர்களுக்குச் சிந்தையுள்ளே சோதியாக நின்று இன்பம் பொழிகிறான்:

முதலில் காண்பவர்கள் அழகுணர்ச்சியால் மகிழ்ச்சி அடைகிறார்கள். அடுத்தபடி காண்பவர்கள் அன்புணர்ச்சியால் கைதொழுது இன்புறுகிறார்கள். மூன்றாமவர் காதலுணர்ச்சியால் உண்முக தரிசனம் பெற்று ஆனந்தத்தில் ஆழ்கிறார்கள். இந்த மூன்று வகையான அநுபவங்களில் ஒன்றைவிட ஒன்று விஞ்சி நிற்கின்றது. இறைவன் பொதுவாகக் காட்சி அளித்தாலும் அவரவர்களுடைய பக்குவத்துக்கு ஏற்றபடி அநுபவம் அமைகிறது. மூன்று வகையான நிலையிலுள்ள மக்களுக்கு மூன்று வகையில் மகிழ்ச்சி விளைகிறது. ஒன்று பொதுவாக இருப்பது. மற்றொென்று காண்பவருக்கும் இறைவனுக்கும் உள்ள உறவினால் அமைவது. இறுதியில் உள்ளது எல்லாவற்றையும் மறந்து இறைவனேயே காணும் அநுபவத்தை உண்டாக்குவது.

இந்த மூன்று வகையிலும் இறைவன் காட்சி தருவதைக் காரைக்கால் அம்மையார் தெரிவிக்கிறார்.

நாண்பார்க்கும் காணலாம்
தன்மையனே, கைதொழுது
காண்பார்க்கும் காணல் ஆம்,
காதலால்—காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே
தோன்றுமே, தொல்உலகுக்கு
ஆதியாய் நின்ற அரன்.