பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


[பழமையான உலகத்துக்கு மூலகாரணமாக நின்ற சிவ பெருமான், வடிவத்தை மட்டும் காண்பவர்களுக்கும் காணத்தக்க இயல்புடையவன்; அன்பினால் இவன் நம் இறைவன் என்று எண்ணிக் கை தொழுது காணும் பக்தர்களுக்கும் காணுதல் கூடும். உள்ளே நிறைந்த பேரன்பால் காணுகிறவர்களுக்கும் அவர்களுடைய சித்தத்துக்குள்ளே சோதிமயமாகக் காட்சியளிப்பான்.]

முதல் நிலையினர் பொதுமக்கள். அடுத்த நிலையினர் பக்தர். கடைசியில் வருகிறவர் அநுபூதிமான். முதலில் காண்பவர் உலகத்தில் அழகுள்ள பல பொருள்களைப் பார்க்கிறதைப் போலப் பார்க்கிறார். இரண்டாமவர் மற்றப் பொருள்களைப் போலல்லாமல் தமக்கு இறைவன் என்ற உணர்வோடு மற்றவற்றை விலக்கித் தம்மையும் இறைவனையும் பார்க்கிறார். மூன்றாமவர் எல்லாவற்றையும் மறந்து தம்மையும் மறந்து அவன் மயமாக நின்றுவிடுகிறார்.

இறைவனை அழகிய வடிவமாகப் பார்த்துப் பழகி, பிறகு அவன் நம் இறைவன் என்ற ஒட்டுறவோடு பார்த்து வழிபட்டு, அப்பால் உண்முகமாகத் தியானித்து நின்றால் இன்ப அநுபவம் பெறலாம் என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாயில் பதினேழாவது பாட்டு.