பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


தால் தெளிவாகத் தெரியும். காட்சியிலே மயக்கம் ஏற்பட்டாலும் சுவைக்கும்போது உண்மை புலனாகும். எல்லாம் தித்திப்புச் சுவையுடையவை என்பது தெரியவரும்.

பலவேறு சமயங்களில் வெவ்வேறு பெயர்களுடனும் இறைவனை வழிபடும் மக்கள் குழந்தைகளைப் போல இருந்தால் என் தெய்வம் பெரிது, உன் தெய்வம் சிறிது என்று பேதபுத்தியோடு பார்ப்பார்கள்; அறிவைக் கொண்டு இந்த வேற்றுமையைப் பெரிதாக்கிக் காட்டிச் சண்டை போடுவார்கள். ஆனால் அநுபவம் ஏற்பட்டுவிட்டாலோ இந்தச் சண்டை ஒய்ந்துபோகும். இறைவனை எப்படிச் சொன்னாலும் சரி என்று தோன்றும். இவ்வளவு வகையாகச் சொல்வதுகூடப் போதாது; இன்னும் வேறு வேறு வகையாகவும் சொல்லலாம் என்றுகூடத் தோன்றும், காரணம், எல்லாம் ஒன்றே என்று அநுபவத்தில் அறிந்ததுதான்.

சமயவாதிகள், அறிவைக் கொண்டு ஆராய்கிறார்கள்; மனித அறிவுக்கு எல்லாம் புலப்படுகிறதில்லை. விருப்பு வெறுப்பையுடைய மனிதன் கடவுளைப் பற்றிய எண்ணத்திலும் அவற்றை நுழைக்கிறான். உணவு, உடைகள், மனிதர்கள் ஆகிய பல துறைகளில் அவனுக்கு வேண்டியவை உண்டு; வேண்டாதவை உண்டு. அறிவைக் கூர்மையாக்கிக்கொண்டு படிக்கின்ற நூல்களில் கூட அவன் விரும்பிப் படிப்பன சில உண்டு; விரும்பாமல் வெறுப்பனவும் உண்டு.

இறைவனை வழிபடும் முறைகளிலும் அவனுக்கு விருப்ப முள்ளவை சில; வெறுப்பானவை சில. அவனுடைய மனத்தைப் பொறுத்து இந்த விருப்பு வெறுப்பு அமைகின்றன.

சிவபெருமானிடம் பக்தி கொள்கிறவன் அவன் திருவுருவத்திலே ஈடுபடுகிறான். தானே பெரியவன், மற்றவர்களெல்லாம் அவனுக்கு அடங்கியவர்கள் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகிறது. மற்றத் தெய்வங்களிடத்தில் சில சமயம் வெறுப்புக்கூட உண்டாகிவிடுகிறது. மறந்தும் புறந்தொழா மாந்தனாகிறான். திருமாலைத் தெய்வமாகக் கொண்டவர்