பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


களிடையிலும் இப்படி விருப்பு வெறுப்புடையவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம், சமரசம் பேசுகிறவர்களைக் கண்டால் ஆத்திரம் ஆத்திரமாக வரும். தாம் வழிபடப் புகுந்த தெய்வமே எல்லாமாக நிற்கிறது என்ற எண்ணம், உபாசனையில் அநுபவம் தலைப்படும்போது உண்டாகும். அது வரையில் பேதபுத்தி இருந்துகொண்டே இருக்கும்.

இந்தப் பேதபுத்தி எத்தனை விசித்திரமான விளைவுகளை உண்டாக்கும் என்பதற்கு ஒர் உதாரணம் சொல்கிறேன்.

சென்னையில் ஒரு வீட்டில் முன்கட்டில் ஒருவரும் பின் கட்டில் ஒருவருமாகக் குடியிருந்தார்கள். இரண்டு பேரும் முருகன் அடியார்கள். முன்கட்டில் உள்ளவர் கோயம்புத்துர்க்காரர். அவருடைய குலதெய்வம் பழனியாண்டவர். அவர் அடிக்கடி பழனியாண்டவருடைய பெருமையை எடுத்துச் சொல்வார். பின்கட்டில் உள்ளவர் திருநெல்வேலிக்காரர். அவருக்குச் செந்திலாண்டவன் குலதெய்வம். அவர் எப்போதும் திருச்செந்தூரைப்பற்றியே சொல்லிக்கொண்ருப்பார்.

“எங்கள் பழனிக்கு வந்து பாருங்கள். ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் காவடி எடுத்து வருவார்கள். அந்தக் காட்சியைக் கண்டால் உடம்பு புல்லரிக்கும். பழனிப் பஞ்சாமிர்தம், பழனியாண்டவன் விபூதி — இவற்றிற்குச் சமானம் உண்டா?’ என்பார் முன்கட்டுக்காரர்.

“அலைவாய் என்று திருசெந்தூருக்குப் பெயர். எவ்வளவோ ஆயிரமாயிரம் ஆண்டவன் அந்தக் கடற்கரையில் கோயில் கொண்டிருக்கிறான். அலைவாயில் இருந்தாலும் கோயிலுக்கு ஆபத்து இல்லை; கடல் அடங்கியே இருக்கிறது. அங்கே போனால் சந்தனம் மணக்கும். ஷண்முக விலாசத்திலே நுழையும்போதே கந்த லோகத்துக்குப் போகிற மாதிரிஇருக்கும்" என்பார் பின்கட்டுக்காரர்.

போட்டி போடுபவர்களைப் போல் இருவரும் பேசுவார்கள். சில சமயங்களில், “பழனி ஆறுபடை விடுகளில்