பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


குழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாகி இறந்து விட்டது. அப்போது பின்கட்டுக்காரர் ஆத்திரத்தோடு வந்தார்; ஓய், அநியாயமாய்க் குழந்தையைக் கொன்றுவட்டீரே! உங்கள் பழனியாண்டவன் காப்பாற்றினானா? எங்கள் செந்திலாண்டவனுக்கு நேர்ந்து கொண்டிருந்தால் கைவிட்டிருப்பானா?” என்று சொல்லி அழுதார்.

இருவரும் முருக பக்தர்களே. ஆனால் தம் ஊர் என்ற பற்று அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது. இவர்கள் செயல் பைத்தியக்காரர் செயல் என்று விளக்கமாகத் தெரிகிறது. சற்றுக் கூர்ந்து சிந்தித்தால் சிவபிரான் வேறு, முருகன் வேறு என்று சொல்வதும் பித்தர் செயலென்று தெரியவரும். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் அரன், அரி என்ற வேறுபாடும் இந்த ரீதியில் அமைவது என்பது புலனாகும். இன்னும் விரிவாகப் பார்த்தால் எந்த வடிவம் ஆனாலும் எந்தப் பெயர் ஆனாலும் ஒன்றையே சுட்டும் என்பது தெளிவாகும்.

அறிவினால் பாராமல் ஆண்டவன் அருளினால் பார்த்தால் இந்த விரிந்த பார்வை உண்டாகும். முதலில் வெவ்வேறாகப் பார்த்துப் பக்தி செய்து, பிறவற்றை மறந்து ஒரு வடிவத்திலே லயித்து ஈடுபட்டு அநுபவம் பெற்று, பிறகு புறத்தே பார்த்தால் இதுவே அவை யாவும் என்று புலனாகும். முதலில் பலவாகத் தோற்றிய தோற்றம் இப்போதும் இருக்கும். ஆனாலும் அப்போது வெவ்வேறு பொருளாகத் தோற்றியவை இப்போது ஒரே பொருளின் வெவ்வேறு வடிவாகத் தோற்றும். கண்ணினால் கண்டபோது வெவ்வேறாகத் தோன்றிய பிஸ்கோத்து, கடித்துப் பார்த்தபோது ஒன்றின் வெவ்வேறு வடிவம் என்று தெளிவானது போலத் தெளிவு பிறக்கும்.

காரைக்காலம்மையாருக்கு இந்தத் தெளிவு அநுபூதியினால் உண்டாயிற்று. "நான் உன்னை எவ்வாறு, இதுதான் என்று சுட்டிக் காட்டுவது எல்லாம் நீயாக இருக்கறாய். உன் பண்பு முழுவதையும் அறியும் வல்லமை எனக்கு இல்லையே!