பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


நீ எப்படி எப்படி எல்லாம் இருக்கிறாய் என்று தனித் தனியே சொல்லி எல்லை வரையறுக்க முடியுமா?’ என்று வியக்கிறார்.

அவர் முதலில் கடவுளைச் சிவபெருமானாகப் பார்த்தவர்; கைலாசபதியாகக் கண்டவர். இராவணன் கைலை மலையைச் செருக்கினால் எடுக்க, அவனை ஒரு விரலால் அழுத்தின பெருமானாக் கண்டு அன்பு செய்தவர். அன்று அவனை அவ்வாறு கண்டு, எம்மான் என்று அணுகிப் பக்தி செய்தார். அதன் பயனக அநுபூதி பிறந்தது. அன்று கண்ட அவனை இன்று எப்படிக் காணுகிறார்? யார் என்று சொல்கிறார்?

—முரண் அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை
யான்அவனை, எம்மானை இன்று.

தானவனகிய இராவணனுடைய வலிமை அழியும்படி தன் திருப்பாதக் கட்டைவிரலால் அழுத்தினான் இறைவன். அவனையே, எங்கள் தெய்வம்; எம்பெருமான்' என்று போற்றி வழிபட்டார் அம்மையார். அவனை இப்போது எவ்வாறு சொல்கிறார்?

“நான் என்னவென்று சொல்வது?’ என்று திகைக்கிறார். வெவ்வேறுபண்புகளுடன் வெவ்வேறுஉருவத்தில் நீவிளங்குகிறாய். பண்பு அற்ற பாழாகவும் இருக்கிறாய். உன் பண்புகள் யாவும் தெரிந்தால் ஒவ்வொரு பண்பையும் உடைய ஒவ்வொரு மூர்த்தியாகச் சொல்லிக்கொண்டே வரலாம். நானோ உன் பண்புகள் யாவற்றையும் உணராதவள்’’ என்கிறார்.

பண்பு உணர மாட்டேன்

[நான் பண்புகள் அனைத்தையும் உணரும் அறிவாற்றல் உடையவள் அல்லள்.]

நா.—9