பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

"மடுத்தபுனல் வேணியினார் அம்மைஎன மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக் குலவியதாண் டவத்தில் அவர்
எடுத்தருளும் சேவடிக்கீழ் என்றும்இருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல் ஆரளவா யினதம்மா"

என்று சேக்கிழார் பாடுகிறார். அளப்பதற்கரிய பெருமை உடையவர் காரைக்காலம்மையார் என்பதில் ஐயம் ஏது?

***

இறைவனாலேயே "அம்மையே" என்று விளிக்கப் பெற்ற பெருமையையுடைய காரைக்காலம்மையார். இயற்றிய அற்புதத் திருவந்தாதி" விளக்கத்தை, "ஸ்ரீ ராம கிருஷ்ண விஜயம்" பத்திரிகையில் தொடராக எழுதி வந்தேன். பல்லோரும் படித்து மகிழ்ந்ததுடன், அதையே தொகுத்துப் புத்தகமாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

அதனை யொட்டி இப்போது இந்த அற்புதத் திருவந்தாதியை நூலாக வெளியிடத் திருவருள் துணை நின்றது. 0 பதிப்பிக்கையில் ஒரு சிறு தவறு நேர்ந்து விட்டது. 40-வது பாடலுக்கான விளக்கம் இரண்டு தடவையாக இடம் பெற்று விட்டது. இது ஒரு அதிகப்படியான கட்டுரைதான் என்றாலும், தவற்றுக்கு வருந்துகிறேன். தொடர்ந்து வெளியிட்டு வந்த ‘ஸ்ரீ ராம கிருஷ்ண விஜயம்’ ஆசிரியருக்கும் இன்று நூலாக வெளியீடும் அமுத நிலையத்துக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தப் புத்தகத்தை வாங்கி ஆதரிக்க வேண்டும் என்று அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் மேலும் நூல்களை வாங்கி ஆதரிப்பதன் மூலம் அன்பர்கள் உதவினால் இன்னும் வெளிவர இருக்கும் பல நூல்களை விரைவில் வெளியிட இயலும் திருவருளும் குருவருளும் துணை கூட்ட வேண்டும்.

“காந்தமலை”
2 நார்ட்டன் முதல் தெரு
சென்னை-28
அன்பன்
கி. வா. ஜகந்நாதன்
4-5-1985