பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



140


(தலையில் அணியாக) உடையவனும், இருபத்தொருலகங்களுமாக உள்ளவனும் ஆகிய சிவபெருமானைன உண்முகத்தே கண்டு அனுபவிக்கும் அநுபவம் இன்று நமக்கு எளிதாக இருக்கிறதே! இது என்ன வியப்பு!

எளிதே, ஏ, வியப்பைக் குறித்தது. அன்றும் என்ற உம்மை எச்சவும்மை; இன்றும் அளப்பரியன் என்ற பொருளைத் தந்தது. மூவாமை - முதுமையை அடையாமை, தேய்ந்து வளராமல் இருக்கும் தன்மை. காணும் அறிவு—அநுபவிக்கும் அநுபவம்.]

செருக்கினால் இறைவனை அறிய முடியாது என்பதும், அன்பினால் அவன் அருளைப் பெற்று ஆனந்தம் உறலாம் என்பதும் இந்தச் செய்யுளின் கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 19-ஆவது பாடல்.