பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. எல்லாம் அவன்

“கடவுள் எங்கே இருக்கிறான்?” என்ற கேள்வியைக் கேட்பதைவிட, “அவன் எங்கே இல்லை?” என்று கேட்பது எளிது. அவன் இல்லாத இடம் ஏது? அவன் எப்படி இருக்கிறான்?

மனிதனுடைய அறிவு சிற்றறிவு என்றாலும் பிறந்தது முதல் அவன் அறிவு வளர்கிறது. அநுபவத்தாலும் ஆராய்ச்சியாலும் கேள்வியாலும் நூல்களைப் படிப்பதனாலும் அவனுடைய அறிவு விரிகிறது. முதலில் திட்பமானவற்றை அறிந்து கொள்கறான். பிறகு நுட்பமானவற்றை அறிந்து கொள்கிறான்.

குழந்தை முதலில் அன்னையை அறிந்து கொள்கிறது; அவள் தனக்குப் பால் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிறது; அணைப்பதை அறிகிறது. ஆனால் அவளுடைய அன்பின் பெருமையை வளர்ந்த பிறகே தெரிந்து கொள்ள முடிகிறது. அன்பினால் செய்யும் செயல்கள் திட்பமாக இருப்பதனல் அவற்றைக் கண்முன்னே பார்த்துத் தெரிந்து கொள்ளும் அறிவுதான் ஆரம்பத்தில் இருக்கிறது. காட்சிப் பொருளை அறியும் அறிவு அது. பிறகு இந்தச் செயல்களுக்கெல்லாம் காரணமான அன்பை உணர அறிவு வளர்ச்சி பெறவேண்டும். திட்பத்தை அறியும் அறிவு முதலில் இருக்கிறது. வளர வளர நுட்பத்தை அறியும் ஆற்றல் வருகிறது. இது பருவத்தால் அமையும் வேறுபாடு.

மனிதர்களுக்குள்ளே அறிவில் வேறுபாடு இருக்கிறது. ஒரே பிராயம் உடையவர்கள் ஒரே மாதிரி அறிவுடையவர்