பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


களாக இருப்பதில்லை. சிலர் சிறிய பருவத்திலேயே பிறர் வியக்கும் அறிவாற்றல் உடையவர்களாக விளங்குகிறார்கள். சிலரோ மந்த புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள். பிறவிதோறும் அறிவு, விளக்கம் பெற்று வரும். முன் பிறவியில் அறிவு விளக்கம் பெற்றவர்கள் இந்தப் பிறவியில் இளமையிலேயே பேரறிவுடையவர்களாக இருக்கிறார்கள்.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”

என்ற திருக்குறள் பிறவிதோறும் அறிவு தொடர்ந்து வருவதைத் தெரிவிக்கிறது.

விலங்குகளைவிட அறிவிற் சிறந்தவன் மனிதன். மனிதர்களுள் ஞானிகள் சிறந்த அறிவுடையவர்கள். மனிதர்களைவிடத் தேவர்கள் மிக்க அறிவுடையவர்கள். அவர்களைப் புலவர் என்று சொல்வார்கள். அதற்கு மிக்க அறிவுடையவர்கள் என்பது பொருள்.

இவ்வாறு அறிவின் தரம் பலபடியாக இருந்தாலும் அறிவின் உச்ச நிலையை அடைந்தவர் யாரும் இல்லை; முழுமையான அறிவை உடையவர் மனிதருள் யாரும் இல்லை. மனிதரைக் கிஞ்சிஜ்ஞர் என்று சொல்வது வழக்கம்; சிற்றறிவுடையவர் என்று பொருள்.

பஞ்சபூதங்களை அடக்கி ஆண்டு, வானத்தில் பறக்கவும் கடலில் மூழ்கிச் செல்லவும், சந்திர மண்டல்த்துக்குச் செல்லவும் விஞ்ஞானம் வழிகாட்டியிருக்கிறது. எத்தனையோ அற்புதமான சாதனைகளை விஞ்ஞானிகள் சாதித்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இந்தச் சாதனைகள் பெருகி வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு காணாத விஞ்ஞான அதிசயங்களைள இப்போது கண்டு வியக்கிறோம். மனிதனால் முடியாத