பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



154


ஞான
மயனாகி நின்றானும் வந்து.

பிரத்தியட்சப் பொருளாகிய ஏழு ஜடப் பொருளாகவும், அநுமானப் பொருளாகிய இயமானனாகவும் தோற்றம் அளித்தாலும் அவன் பரமஞானமயனாய், அதிசூட்சுமமான பொருள் என்பதை மறக்கக் கூடாது. ஆதலின் இறுதியில் அதைச் சொல்லிப் பாட்டை நிறைவேற்றுகிறார் காரைக்கால் அம்மையார்.

அவனே இருசுடர், தீ, ஆகாசம்ஆவான்;
அவனே புவி, புனல், காற்று ஆவான்;—அவனே
இயமானாய் அட்ட மூர்த்தியுமாய், ஞான
மயனாகி நின்றானும் வந்து.

[இயமானனாய் அட்டமூர்த்தியுமாய் ஞான மயனாகி வந்து நின்றானும் அவனே என்று பின்பகுதியில் கூட்டிப் பொருள் செய்க. இயமானனாய் ஆகிய அட்ட மூர்த்தியுமாய் என்று ஒரு சொல் வருவிக்க.]

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 21-ஆவது பாட்டு.