பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



159

எதற்கு ஆபத்து? இதனைக் கொள்வதே ஒக்கும்' என்று சுட்டியது எதனை? அதை உடனே சொல்லவில்லை. இறைவனை விளித்துவிட்டுப் பிறகே அதைச் சொல்கிறார். "நீலகண்டப் பெருமாளே! உம்முடைய திருமேனியில் உள்ள பிறையைத் தான் சொல்கிறேன்” என்று முடிக்கிறார்.

வந்து ஓர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர்! எங்கள்
பிரானீர்! உம் சென்னிப் பிறை.

அச்சத்தால் உண்டான படபடப்பும் தடுமாற்றமும் முன்பின் மாற்றிக் கூறும் குழப்பமும் இந்தப் பாட்டில் இருக்கின்றன.

வந்துஇதனைக் கொள்வதே ஒக்கும்; இவ்வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ;—வந்து ஓர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர்!எங்கள்
பிரானீர்! உம் சென்னிப் பிறை.

[தேடி வந்து ஓர் இரவானது தன் இயல்பு பின்னும் இருண்டாற் போலக் கறுத்திருக்கும் கண்டத்தை உடையவரே, எங்கள் தலைவரே உம்முடைய திருமுடியில் உள்ள பிறையாகிய இதனை, ஊர்ந்து வந்து பற்றிக் கொள்வது போல இருக்கிறது, இந்தக் கொலைகாரப் பாம்பின் கருத்தை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

வந்து-தான் இருக்குமிடத்திலிருந்து வந்து, வாள் அரவு-கொலைத்தன்மையை உடைய பாம்பு, சிந்தை-