பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



160

எண்ணம். அது: பகுதிப் பொருள் விகுதி. தெரிந்து-ஆராய்ந்து காண்மின் - தெளியுங்கள். இராநீர் - இரவின் தன்மை, என்றது கருமையை. பிரானார் என்ற சொல் விளி வேற்றுமையில் பிரானீர் என வந்தது. 'கொள்வதே' என்பதில் உள்ள ‘ஏ’யும், காண்மினோ' என்பதில் உள்ள 'ஓ'வும் அசைகள்.

‘பாம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அது உம்மிடம் புகல் அடைந்த பிறையை விழுங்கினாலும் விழுங்கி விடும்' என்று அசதியாடுகிறார் அம்மையார்.

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 22-ஆம் பாடல்.