பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

கிறது. கை கால்கள் மறைகின்றன.சோதி வடிவாகத் தோன்று கிறது; வடிவு சோதி வீசுகிறது; பிறகு வடிவு கரைகிறது. சோதியே பிழம்பாக நிற்கிறது. இப்போது சோதி, வெள்ளமாகப் பரந்து விரிவடைகிறது. அதற்கு எல்லை காண முடிவதில்லை. மனிதன் கடலுக்குள் மூழ்குவது போல உள்ளம் அந்தச் சோதி வெள்ளத்தில் மூழ்கி விடுகிறது. அப்பால் மனம், செயலற்றுப் போய்விடுகிறது. அதற்கு மேல் அங்கே ஒன்றும் இல்லை.

காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்று முப்புடிகளும் நழுவி விடுகின்றன. எல்லாம் இழந்த நிலை அது- நிரந்தர உண்மையான இன்பம் ஆதலால் ஒன்று என்று சொல்லலாம். ஒன்றும் புலனாகாத, அனுபவிக்கிறோம் என்பதற்குச் சாட்சியே இல்லாத நிலையாதலின் அதைச் சூன்யம் என்றும் சொல்லலாம். "முப்பாழும் பாழாய்: முடிவிலொரு சூனியமாய்” என்று சொல்வார்கள். அது கண்ட மற்ற அகண்ட பரிபூரண அனுபவம். அந்தப் பூரணத்தை, 'எல்லாமான ஒன்று' என்றும் சொல்லலாம். ஒன்று என்று சுட்டுவதற்கும் சாட்சியின்மையால் சூன்யம்,'பாழ், வெறுமை’ என்றும் சொல்லலாம். இது ஒளி நிறைந்த சூன்யம்.

இப்படித் தம்மை மறந்த சமாதி நிலையில் ஒன்றியபின் விழிப்பு நிலையை அடையும்போது முதலில் சோதி வெள்ளம் தோன்றிய நிலைக்கு இறங்கிப் பிறகு முழு விழிப்பு நிலைக்கு வர வேண்டும். வடிவம் மறைந்து சோதி வெள்ளம் தோன்ற, அப்பால் எல்லாம் மறந்த நிலை அனுபவ எல்லைக்கு ஏறும் போது உண்டாவது. அதே போலத் தம்மை மறந்த நிலையிலிருந்து இறங்கும்போது அதே சோதி வெள்ளத் தோற்றம் தோன்றும். பிளாட்பாரத்திலிருந்து வண்டியில் ஏறுகிறோம்; இறங்கும்போது பிளாட்பாரத்தில் இறங்குகிறோம். அந்தப் பிளாட்பாரம் போன்றது சோதி தரிசனம்.

அந்த நிலைக்கு இறங்கி வந்தவர்கள் எளிதில் பின்னும் கீழே இறங்க முடியாது. சுழுத்திக்கும் (ஸுஷுப்திக்கும்)