பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



175

"இப்படிப் பகலிலே ஊர்தோறும் திரிந்து பிச்சை எடுப்பதும், இரவிலே, ஈமவனத்தில் ஆடுவதும் ஏன் ஐயா? உமக்கு என்ன தலை எழுத்தா?’ என்று. யாராவது அவனைக் கேட்கிறார்களா? வேண்டியவர்கள் கேட்க அஞ்சி நடுங்குகிறார்கள். வேண்டாதவர்கள், "இப்படியே அலையட்டும்; நாம் அவனைப் பரிகசித்துக் சொண்டே இருப்போம்” என்று இருக்கிறார்கள். நாமே சும்மா கிடந்து புலம்புகிறோம். அவனுக்கு இப்படி எல்லாம் ஏன் புத்தி போகிறதென்று சொல்லிச் சொல்லி வருந்துகிறோம்.

'அவனைப் பற்றி இங்கே இருந்து நாம் என்ன புலம்பினால்தான் என்ன? மற்றவர்கள் தடுக்க மாட்டார்களா என்று சொல்லித்தான் என்ன பயன்? நாமே கேட்டால் என்ன? ஆம், அதுதான் சரி. இங்கே அவன் இல்லாத போது எத்தனை சொன்னாலும் யார் கேட்கப் போகிறார்கள்? அவனைக் காணும் போது நேரே வைத்து, “ஏன் ஐயா, இபபடியெல்லாம் செய்கிறாய்? இந்தப் பிச்சைக்காரக் கோலம் எதறகு? இந்தப்பேய். நடனம் எதற்கு? என்று கேட்டு விடுவோம்.

இப்படியெல்லாம் தாயன்பினாலே காரைக்கால் அம்மையார் எண்ணுகிறார். அந்த எண்ணம் பாடலாக உருவெடுக்கிறது.

இங்கிருந்து சொல்லுவது ஏன்? எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும், — பொங்கு இரவில்
ஈமவனத்து ஆடுவதும் என்றுக்கு? என்று ஆராய்வோம்,
நாம் அவனைக் காணலுற்ற ஞான்று.

(இங்கே அவனைக் காணாமல் இருந்துகொண்டு அவனைப் பற்றிக் குறை கூறுவது ஏன்? நாம் அவனை நேரிலே காணும் அன்று, 'எம்பெருமானே, உன்னுடைய பெருமையையும்