பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176


மற்றவர்கள் கூறும் பழியையும் எண்ணாமல், எவ்விடத்திலும் பிச்சைக்காகத் திரிகின்ற இந்தக் கோலமும், மிக்க இரவில் சுடுகாட்டில் ஆடுவதும் எதற்காக?” என்று கேட்போம்.

எத்திறமும் எந்தக் கோலமும்; எந்த வகையும். பொங்கு - மிக்க. ஈமவனம் - ஈமமாகிய சுடுகாடு; என்னுக்கு - எதற்காக. ஆராய்வோம்-கேட்போம். ஞான்று - நாள், சமயம்.)

இது அற்புதத் திருவந்தாதியில் 25-ஆவது பாட்டு.