பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179



ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற.

[தொங்கும் கேசத்திலுள்ள சடைகள் பொன்மலையின் மேல் மின்னும் மின்னல்களைப்போல உள்ளன. குழற்சடைகள் —குழலிலுள்ள சடைகள். பொன்வரை—பொன்மலை; மேரு. பொன்வரை மின்னுவன—மின்னுகின்ற மின்னல்கள்; வினையாலனையும் பெயர். பொன்வரை மேல் மின்னுவன என்ற பாடம் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஏட்டுச் சுவடியைப் பார்த்து ஆராய வேண்டிய இடம் இது.]

அவன் நீலகண்டப் பெருமான். கறுப்பான கழுத்தையுடையவன். பொன்மேனியிலே அது சிறிதே மாறுபாடாகத் தோற்றினாலும் உண்மையை உணர்வாருக்கு அது அழகாகவே இருக்கும்.

“கறைமிடறு அணியலும் அணிந்தன்று”

என்ற புறநானூற்றில் வருகிறது. அந்தக் கறைமிடறு அழகாக இருக்கிறதாம். இறைவன் நஞ்சை உண்டு கண்டம் கறுத்ததனால்தான் தேவர்கள் பிழைத்தனர். தேவமகளிர் மங்கலமுடையவரானர்கள். காரைக்கால் அம்மையார் இந்த நீலகண்டத்தை அடிக்கடி எடுத்துக் கூறுவார்.

கறைமிடற்றான்.

[நஞ்சினால் கறுப்பைப் பெற்ற திருக்கழுத்தை உடையவன்.]

அடுத்தபடி அவன் மார்பைக் காட்டுகிறார். அது பொன் மார்புதான். ஆனால் அங்கே தொங்குவன எவை? வண்ணத்தால் அழகு பெற்ற மலர்மாலைகளா? இல்லை, இல்லை. ஒன்றிரண்டு மலர்மாலைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மறைத்துக்கொண்டு மிகுதியாக விளங்குபவை எலும்பு மாலை