பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18O

கள்; அவற்றுக்கு அருகில் பாம்புகள் புரண்டு புரண்டு விளங்கும்.

கறைமிடற்றான் பொன்மார்பின்—ஞான்றுஏங்கும்
மிக்குஅயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கு அயலே வைத்த அரவு.

[நீலகண்டப் பெருமானுடைய பொன்னிறம் பெற்ற திருமார்பில் எங்கே பார்த்தாலும் தொங்கியபடியே மிகுதியாகத் தோற்றப் பொலிவு தரும்படி அருகருகே என்புமாலையும் அவற்றுக்கு அருகே அணிகலனாகப் பூண்ட பாம்புகளும் விளங்கிப் புரண்டு தோன்றும். ஞான்று—தொங்கி, மிளிரும்—புரண்டு தோன்றும்; விட்டு விளங்கும். அக்கும் அவற்றின் அயலே பூணாக வைத்த அரவும் என்று பொருள் கொள்க. உம்மைகள் தொக்கன. அக்கும் அவற்றின் அயலே வைத்த அரவும் பொன்மார்பில் எங்கும் ஞான்று மிக்கு அயலே தோன்ற விளங்கி மிளிரும் என்று கூட்டுக.]

தேவருடைய என்புகளையே இறைவன் மாலைகளாக அணிந்துள்ளான். அவை மற்றத் தேவர்களின் பதவிகள் நிலையாதன என்பதைக் காட்டும் அடையாளங்களாக நிலவுகின்றன.

தாருகாவனத்து முனிவர்கள் யாகம் செய்து அவற்றிலிருந்து தோன்றிய பாம்புகளை இறைவனைக் கொல்லும்படி அனுப்பினார்கள். இறைவனுக்கு அவற்றால் எந்தத் துன்பமும் உண்டாகவில்லை. மிகக் கொடிய நஞ்சாகிய ஆலகாலத்தையே அவன் உண்டு கழுத்தில் வைத்தவயிைற்றே! அந்த ஆலகால நஞ்சை உண்டு சீரணிக்காமல் அதற்கே சிரஞ்சிவித்தன்மை கொடுத்தது போலக் கண்டத்தில் வாழ வைத்தான். பாம்புகளையும் கொல்லாமல் அவற்றையே அணிகலனாகப் பூண்டு கொண்டான். இறைவனைச் சார்ந்ததனால் அவை அச்சந்தரும் நிலையினின்றும் நீங்கி, அணிகலனாக, அழகு தரும் பொருளாகி