பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27. பாம்பை அணையாதே!


 காரைக்கால் அம்மையாருடைய உள்ளத்தில் தாய் அன்பு சுரக்கிறது. இறைவன் அவரை,'அம்மையே!” என்று அழைத்தான். இவர் நம்மைப் பேணும் அன்னை” என்று உமாதேவியாரிடம் சென்றான். அவரிடம் அன்னைக்குரிய பண்பு இருப்பதனால்தான் அப்படிச் சென்றான்.

ஒரு குழந்தை கண்டதைத் தின்றால் அதன் தாய் தடுப்பாள்; "உன்உடம்புக்கு ஆகாது” என்று கூறுவாள். கத்தியை எடுத்தால், "எடுக்காதே; கையில் காயம் பட்டுக் கொள்வாய்” என்று எச்சரிப்பாள்; அதை அவன் கையிலிருந்து வாங்கிவிட முயல்வாள்.

இத்தகைய மனோபாவத்தோடு அம்மையார் பேசுகிறார். வாத்ஸல்ய பாவத்தோடு, குழந்தையிடம் தாய்க்கு உள்ள தூய அன்போடு பேசுகிறார்.

சிவபெருமான் தன் திருமேனியில் அரவங்களையே அணிகலனாகப் பூண்டிருக்கிறான். அவை அவனை ஒன்றும் செய்யா, ஆனால் தாயுள்ளத்துக்கு அவற்றைக் கண்டால் பயமாக இருக்கிறது.

பட்டாஸைக் கையில் வைத்துப் பொருத்தி எறியும் குழந்தையைக் கண்டு கலவரப்பட்டு, போட்டு விடடா! போட்டுவிடடா!” என்று அலறும் தாய்மார்களை நாம் கண்டிருக்கிறோம். அந்தப் பையன் சிறிதும் அச்சமின்றி அதைப் பிடித்திருப்பான். அவன் சிறிதும் கலவரம் அடைவதில்லை. ஆனல் தாய்க்கோ நெஞ்சு படக்குப் படக்கு என்று அடித்துக் கொள்ளும். உண்மையில் பையனுக்கு ஒன்றும்