பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

நேராது. அவனுக்குத் தெரியும், எந்த நேரத்தில் அதை எறிய வேண்டுமென்று. ஆனால் தாய் அதையெல்லாம் எண்ண மாட்டாள். பட்டாஸ் கையிலே வெடித்து விட்டால் கையில் தீப்புண் உண்டாகிவிடுமே என்று அவள் அஞ்சி நடுங்குவாள்.

அந்த நிலையில் நின்று பேசுகிறார் காரைக்காலம்மையார், "எம்பெருமானே, இந்தப் பாம்பை நீ பூணக்கூடாது. இதை விட்டுத்தள்ளு. உனக்கு வேறு ஆரமா கிடைக்காது? நல்ல பொன்னாரங்கள் இருக்கின்றனவே! அவற்றில் ஒன்றை அணிந்து கொள்” என்கிறார். அரவைக் கண்டு அஞ்சி முன்பும் இவர் பாடியிருக்கிறார்.

தகவுடையார் தாம் உளரேல் தார்அகலம் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர்; மிக அடா
ஊர்ந்திடுமா காகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமேல் ஏபாவந் தான்.

என்று 13ஆம் பாட்டில் சொன்னார். 22ஆம் பாட்டில்,"வாளரவு பிறையை விழுங்கிவிடும். அதன் சிந்தையைத் தெரிந்து கொள்ள வேண்டும்' என்று எச்சரித்தார். இப்படிச் சொல்லியும் அவன் அந்த நாகாபரணத்தை விடவில்லை. 'பல நாள் உன்னைப் புகழ்ந்து வணங்கி, இந்த நாகப் பாம்பு வேண்டாம் என்று சொன்னேனே! அது உன் காதில் ஏறவில்லையா? முதலில் ஊராரைப் பார்த்துச் சொன்னேன். யாராவது அதைக் கேட்டு உன்னைத் தடுப்பார்கள் என்று எண்ணினேன். யாரும் ஏதும் செய்யவில்லை. பிறகு உன்னைப் பார்த்தே சொன்னேன். உனக்கு ஆபத்து வருமென்று சொல்ல வேண்டாமென்று, நயமாக, உன் தலையில் அணிந்த பிறைக்கு ஆபத்து வரும் என்று சொன்னேன். குறிப்பை அறிந்து நீக்கிவிடுவாய் என்று எண்ணினேன். நீயோ விட்டபாடில்லை. பலகால் சொல்லியும், பலநாள் சொல்லியும், கெஞ்சிக் கேட்டு இது வேண்டாம் என்று சொல்லியும் நீ கவனிக்க