பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185

இறைவன் திரிபுரங்களைச் சிரித்து எரித்தானென்றும், விழித்து எரித்தானென்றும், அம்பெய்து அழித்தான் என்றும் வெவ்வேறு வகையாகச் சொல்வதுண்டு. தேவாரப் பாசுரங்களில் இந்த மூன்று வகையையும் பார்க்கலாம். இவற்றைக் கற்ப பேதங்களில் நிகழ்ந்தவை என்பார்கள். அதாவது ஒவ்வொரு கற்பத்திலும் இறைவன் இத்தகைய திருவிளையாடல்களை மீட்டும் மீட்டும் செய்தருளுகிறான். அப்போது சில சிறிய வேறுபாடுகள் அமையும். அப்படி அமைந்த வேறுபாடுகள் இவை.

'எனக்கு அணிகலன்களாக உள்ளவை அந்தப் பாம்புகள் அணிகலன்கள் இல்லாமல் வெற்றுடம்பாக இருந்தால் நன்னாயிராதே? என்ற கேள்வியை இறைவன் எழுப்பலாம். அம்மையார் அதை எதிர்பார்த்து யோசனை சொல்கிறார். “எத்தனையோ வகையான ஆரங்கள் இருக்கின்றன. முத்தாரம், மணியாரம், பொன்னாரம் என்று பல வகை உண்டு. நீ விரும்பினால் உனக்குக் கிடைக்காதா? பொன்னாரம் ஒன்றை நீ அணிந்து கொள்வாயாக?' என்கிறார்.

பொன்னாரம் மற்றொன்று பூண்.

[ஆரம்-மாலை. மற்றொன்று-இந்த நாகம் அல்லாத ஒன்றை.]

தாயன்பினால் வாத்ஸல்ய ரஸம் தோன்றக் காரைக்காலம்மையார் இந்தப் பாட்டைப் பாடுகிறார்.

அரவம் ஒன்று ஆகத்து நீநயந்து பூணேல்.
பரவித் தொழுதிரந்தேம் பன்னாள்;—முரண் அழிய
ஒன்னாதார் மூஎயிலும் ஓர் அம்பால் எய்தானே;
பொன்னாரம் மற்றொன்று பூண்.

[மூன்று அசுரர்களாகிய பகைவர்களுடைய வலிமையும் அழியும்படி அப்பகைவர்களுடைய மூன்று மதில்களாகிய