பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

திரிபுரங்களையும் ஒர் அம்பால் எய்தவனே, உன் திருமேனியில் ஒரு பாம்பையும் நீ விரும்பி அணிந்து கொள்ளாதே; வேறு ஒரு பொன்னாரத்தைப் பூண்பாயாக.]

இரும்பு, வெள்ளி, பொன் என்னும் மூன்று உலோகங்களாகிய மதிலைப்பெற்ற மூன்று பறக்கும் கோட்டைகளுக்குத் தலைவராக வித்யுன்மாவி, தாரகாட்சன், வாணன் என்ற மூன்று அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தம் கோட்டைகளைத் திடீரென்று எங்கேனும் இறக்குவார்கள். அவற்றின் கீழ் மக்கள் அகப்பட்டு இறந்து போவார்கள். தேவர்கள் முறையிட ஆண்டவன் அந்த முப்புரங்களை மட்டும் அழித்தான். அசுரர் மூவரும் அடிபணிய, இருவரைத் தம் வாயில் காவலராகவும், வாணனை முழவு வாசிப்பவனாகவும் இருக்கும்படி அருளினான் ஆண்டவன். இது புராண வரலாறு.

மேலே சொன்னது அற்புதத் திருவந்தாதியில் உள்ள 27-ஆம் பாடல்.