பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

அப்போது இந்தப் பாடலைப் பாடுகிறார். பக்தி விசித்திரங்களில் ஒன்று இது. தாயன்புக்கு இப்படியெல்லாம் தோன்றும். அன்பு அதிகமாகி விட்டால் அறிவு சற்றே ஒளிந்து கொள்ளும்.

'அறிவு இல்லாமல் இறைவனுக்கு ஆபத்து வந்து விடுமே என்று அஞ்சலாமா?’ என்று கேட்கலாம். அன்பும் உணர்ச்சியும் மீதூரும் போது ஆராய்ந்து பார்க்கும் அறிவு தலைப்படாது இத்தகைய இடங்களில் நாம், அறிவின்மை வெளிப்பட்டதாக எண்ணக் கூடாது. அன்பின் விசித்திரம் இது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். 'ஆனையைக் கெடுத்தவன் பானையிலும் தேடுவான்’ என்பது ஒரு பழமொழி. ஆனை பானைக்குள் நுழையாது என்பதை அவன் அறிந்தவன்தான் என்றாலும் ஆனையை இழந்த துயரம் அறிவை மறைத்து விடுகிறது. பக்தி உணர்ச்சியிலும் இப்படிப் பல நிலைகள் உண்டு. அங்கெல்லாம் பக்தியின் அற்புத நிலைகளைப் பார்த்து நாம் வியக்க வேண்டும். அப்படி வியக்கும் பாடல்களில் ஒன்று இது.

பூணாக ஒன்று புனைந்து ஒன்று பொங்கு அதனின்
தாணாக மேல்மிளிர நன்கு அமைத்துக்—கோள் நாகம்
பொன்முடிமேல் சூடுவதும் எல்லாம் பொறியிலியேற்கு
என்முடிவ தாக இவர்?

இதன் பொருள்: [இதய-இறைவராகிய இவர், கோள் நாகம் ஒன்று-கொலை புரிவதாகிய நாகப் பாம்பு ஒன்றை. பூணாகப் புனைந்து-மார்பில் ஆபரணமாக அணிந்து, ஒன்று பொங்கு அதனின் நாணாக-மற்றொரு பாம்பை, சிறந்து தோன்றும் புலித் தோலாடையை இறுகக் கட்டும் அரை நாணாக, மேல் மிளிர-மேலே விளங்கும்படி, நன்கு அமைத்து-நன்றாகச் செறித்துக் கொண்டு, (மற்றொரு பாம்பை) பொன் முடிமேல் - அழகிய திருமுடியின்மேல், சூடுவதும் எல்லாம் —அணிந்திருப்பதும் ஆகிய இந்தச் செயல் எல்லாம். பொறி