பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191

இலியேற்கு-அறிவில்லாத எனக்கு, என் முடிவது ஆக-என்ன முடிவு உண்டாவதற்காக?]

இவற்றைக் கண்ட எனக்கு என்ன ஆபத்து வரப்போகிறதோ தெரியவில்லை என்று கவலையுறுகிறார். கண்ட எனக்கே இப்படியானால், பூணாகக் கொண்ட இவருக்கு என்ன ஆகும் என்பது குறிப்பு.

கோணாகம் என்பதை முன்னும் கூட்டிப் பொருள் செய்க. இங்கே இடைநிலை விளக்காக நின்றது. கோள் நாகம் ஒன்று புனைந்து, கோன்நாகம் ஒன்று நன்கமைத்து. கோள் நாகம் சூடுவது என்று கூட்டுக. ஒன்று என்பதை வருவித்துச் சூடுவதற்கும் சேர்த்துப் பொருள் செய்க.

அதன்-தோல்; இங்கே புலித் தோல், நாண்-ஆடை நழுவாமற் கட்டும் அரை ஞாண். கோள்-கொலை, பொறி-அறிவு; நல்ல தலையெழுத்து என்றும் பொருள் கொள்ளலாம். இத்தகைய அவலக் காட்சியைக் கானும் தீயூழ் வந்ததே என்று துயருறுவதாகக் கொள்ள வேண்டும்.

அறிவு என்று பொருள் கொண்டால், இந்தப்பெருமான் இப்படிச் செய்வதற்குரிய காரணமும் கருத்தும் அறியாத அறிவிலி' என்ற குறிப்புப் பெறப்படும். என் முடிவது ஆக-என்ன துன்ப அநுபவத்தில் மூடியப் போகிறதோ என்றபடி.

இவர் என்பதை முதலில் சுட்டி இவர் புனைந்து என்றும், இவ்வாறே பிற வினைகளோடும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

இது அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதியில் 28-ஆம் பாட்டு.