பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



29. பேய்க் கோலம்



இறைவனுடைய திருக் கோலம் கண்டு எள்ளி நகையாடுவார் இருக்கின்றனர். அவர்கள் அவனிடம் அன்பில்லாத அயலார்; அவனுடைய பெருமையை அறியாதவர்கள்.

இறைவனுடைய திருமேனியில் உள்ள பொருள்கள் யாவும் சில கருத்துக்களைப் புலப்படுத்துகிள்றன. அவை சில உண்மைகளை உள்ளடக்கிய அடையாளங்கள். அவன் செய்த திருவிளையாடல்களும் சில உண்மைகளைப் புலப்படுத்துபவை.

"குறிக ளும்அடையாளமும் கோயிலும்
நெறிக ளும்அவர் கின்றதோர் நீர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறிய வீர்உமக்கு என்கொல் புகாததே!"

என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். அவனுடைய திருவுருவம் முதலியன சிலவற்றின் அடையாளங்கள். அந்த நுட்பத்தை அறியாமல் கோலத்தைப் புறக்கண்ணால் கண்டு குறை கூறுவோர் இறைவனுடைய அன்பர் கூட்டத்திற் சேரத் தக்கவர் அல்லர்: அவர்கள் புறம்பானவர்கள்: பிறர்.

இறைவன் திருக்கோலத்தை அவர்கள் எங்கே கண்ணால் பார்த்திருக்கப் போகிறார்கள்? தேவர்கோ அறியாத தேவதேவனகிய அவன், குறை கூறும் பிறருக்கு எளிதில் காட்சி அளிப்பானா? அப்படியானால் அவர்கள் குறை கூறுகிறார்களே! எதைக் கண்டு திருக்கோயில்களில் வைத்து வழிபடும் உருவங்களிலும், பிற இடங்களில் உள்ள ஓவியங்களிலும், இறைவனைப் பற்றிய தோத்திரங்களிலும், புராணங்களிலும்