பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198


அவர்கள் அறிவு வன்மையுடையவர்கள் அல்லர்; மாட்டாதார்—பொருளை—உண்மையை—உணர மாட்டாதார்.

ஆகவே பக்தர்களே, எம் இறைவனை இப்படி இகழ்கிறார்களே என்று நீங்கள் வருந்தாதீர்கள்; கோபமும் அடையாதீர்கள். பாவம் இவர்களுக்கு உண்மை தெரியவில்லையே என்று இரங்குங்கள் என்று குறிப்பாகப் புலப்படுத்துகிறார் அம்மையார். அப்பர், "பொறியிலிர் உமக்கு என்கொல் புகாததே’ என்றுதானே கேட்கிறார்?

இவரைப் பொருள் உணர மாட்டாதார் எல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்!-இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலம் கண்டார் பிறர்.

{{gap2}[}இதன் பொருள்: இவர் தமது — இந்தச் சிவபெருமானுடைய. பூக்கோல மேனி-தாமரைப் பூவின் அழகையுடைய சிவந்த திருமேனியில், பொடி பூசி-சுடுகாட்டுத் திருநீற்றைப் பூசி. என்பு அணிந்த-எலும்பை ஆபரணமாக அணிந்த, பேய்க் கோலம்-பேய் போன்ற வடிவத்தை. கண்டார் பிறர்-பார்த்தவர்களாகிய, அன்பர் அல்லாத பிறர். இவரை-இந்தப் பெருமானுடைய, பொருள் உணர மாட்டாதார்-உண்மையை உணரும் அறிவு வன்மையும் அருள் வன்மையும் இல்லாதவர்கள்; எல்லாம்-அவர்கள் யாவரும், இவரை–இப்பெருமானை. இகழ்வதே-இழித்துப்பேசுவதையே. கண்டீர்-பாருங்கள்! (என்ன அறியாமை இது?]

இவரை என்றது உருபு மயக்கம். இவர்: நெஞ்சுக்கு அணியராக இருத்தலின் அண்மைச் சுட்டால் சொன்னார்; இது நெஞ்சறி சுட்டு, பொருள்-உண்மை; பொருள்சேர் புகழ்"(குறள்) என்பதில் பொருள் என்பது உண்மை என்னும் பொருளில் வந்தது காண்க. மாட்டாதார்-வன்மையற்றவர். இகழ்வதே புகழ்வதோ புறக்கணிப்பதோ இன்றி இகழ்