பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199


வதையே, கண்டீர்-பாருங்கள்; அன்பர்களைப் பார்த்துச் சொன்னபடி, பார்த்து இறங்குங்கள் என்பது குறிப்பாகப் புலப்படுகிறது. மேனிப் பொடி பூசி-மேனியில் பொடியைப் பூசி, கண்டாராகிய பிறர்; பிறர் என்பது நம்மைப் போன்ற அன்பர்கள் அல்லாத அயலவர் என்றபடி.

"பிறர், மாட்டாதார்’ இகழ்வதே கண்டீர். என்று கூட்டிப் பொருள் செய்க.]

இறைவனுடைய அன்பர்கள் இறைவனுடைய திருக்கோலத்தின் உண்மையை உணர்ந்து புகழ்வார்கள் என்பது இதிலுள்ளதை எதிர்மறுத்துக் காணும்போது தெளிவாகும்.

இது அற்புதத் திருவந்தாதியில் 29-ஆவது பாட்டு,