பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203


இதனால் அவனுடைய நித்தியத்தன்மையும், சர்வ காரணனாக இருக்கும் இயல்பும் புலனாகின்றன. அவன் அணிந்த என்பும் மற்றவர்களின் அநித்திய வாழ்வையும் அவனுடைய நித்தியத் தன்மையையும் காட்டுகின்றது.

இப்படி ஆய்ந்து பார்த்தால் அவன் கோலம், அவன் ஆடும் ஆட்டம் யாவுமே அவனுடை தூய பெருமையையே காட்டுகின்றன. இதைக் காரைக்கால் அம்மையார் சொல்கிறார்.

பிறருடைய என்புகளை அணிந்து இரவிலே வலிய பேயும் தானும் மகிழ்ந்து ஆடுகிறான் இறைவன்; தீயில் எம்பெருமான் ஆடுகிறான். இதன் அருமை பெருமைகளை அவனுடைய அன்பர் அல்லாத பிறர் அறியலாகாது. அப்படி ஒருகால் பிறர் அறியமுடியுமானால் அப்போது அவர்கள் மற்றவர்களைப் போன்ற சாமானிய அறிவுடையவர்கள் ஆகமாட்டார்கள். அவர்கள் அநுபவத்தோடு ஒட்டிய பெரிய உணர்வை உடையவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் பேருணர்வாக விளங்குபவனும் அந்தப் பெருமான்தான்.

இப்படி அம்மையார் பாடுகிறார்:

பிறர் அறியல் ஆகாப் பெருமையரும் தாமே; பிறர் அறியும் பேருணர்வும் தாமே;-பிறருடைய
என்பே அணிந்துஇரவில் நீஆடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.

[வன் பேயும் தாமும் மகிழ்ந்து-வன்மையையுடைய பேய்களும் தாமும் கூடி மகிழ்ந்து. பிறருடைய என்பே அணிந்து—மற்ற தேவர்களுடைய என்பைப் புனைந்து கொண்டு. தீஆடும் எம்மானார்-மயானத்தில் தீயில் கூத்தாடும் எம்பெருமானார். தாமே பிறர் அறியல் ஆகாப் பெருமையரும்-தாம் ஒருவரே அன்பர் அல்லாத பிறர் அறிவதற்கு இயலாத பெருமை