பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204


உடையவரும் ஆவார். பிறர் அறியும் பேர் உணர்வும் தாமே. பிறர் தம்மை அறிவதற்குரிய பெரிய அநுபவஞானமாக இருப்பவரும் தாம் ஒருவரே ஆவர்.]

பிறருடைய என்பே அணிந்தவர் என்பதனால் அவர் என்றும் உள்ளவர் என்றும், பேருணர்வும் தாமே என்பதனால் அவர் சித் உருவினர் என்றும், ஆடும் எம்மானர் என்பதனால் ஆனந்த வடிவினர் என்றும் புலனாகும். இதனால் அவர் சச்சிதானந்தமூர்த்தி என்று சொன்னவாறாயிற்று.

இது அற்புதத் திருவந்தாதியில் 30-ஆம் பாட்டு.