பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31. அன்பைப் பெருக்கு


காரைக்கால் அம்மையார் இறைவனை வேண்டித் தம்முடைய அழகிய வடிவத்தைத் தாங்கினர். அந்த வடிவத்தோடே இறைவனைத் தரிசித்தார்; பாடினார். அந்தப் பாடல்களில் அவர் தம்மைப் பேயென்றே சொல்லிக் கொள்வார். "செடிதலைக் காரைக்காற் பேய், செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்(மூத்த திருப்பதிகம், 1 : 1) என்றும், "காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக்காற் பேய்தன், பாடல் பத்தும்’ (மூத்த திருப்பதிகம், 2 : 1)என்றும் பாடியிருக்கிறார்.அற்புதத் திருவந்தாதியையும் பேய் வடிவம் கொண்டிருந்தபோதே பாடினார் என்பதை, இந்த அந்தாதியின் இறுதிப் பாட்டில், “உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக், கரைவினால் காரைக்காற் பேய்சொற் - பரவுவார்’ என்று வருவதனால் அறியலாகும்.

அவர் பேயுருவத்தை அடைந்ததனால் வடிவம் மாறிற்றே அன்றி மனப்பக்குவம் மாறவில்லை. அது மேலும் மேலும் உயர்ந்தது. இறைவனுடைய திருவருளேயே நினைவதில் உறுதியாக நின்றது.

மனம் என்பது விலங்கினங்களுக்கும் உண்டு. நாய் தன் எஜமானனை அறிந்து வாலாட்டுகிறது. மனம் இல்லாவிட்டால் அந்த நன்றியுணர்வு இருக்க முடியுமா? யானை தனக்கு யாரேனும் தீங்கு செய்தால் அதை நினைவில் வைத்துக் கொண்டு, பிறகு பழி வாங்குகிறது. அந்த ஞாபகசக்தி, மனம் இருநதால்தானே இருக்கமுடியும்? குரங்காட்டியினால் பழக்கப்பட்ட குரங்கு அவன் சொல்கிறதை அறிந்து செய்கிறதே